மன்னாகண்டல் குளம் உடைந்தது! மக்களுக்கு பாதிப்பில்லை! விவசாயத்துக்கு நீர் இல்லை என மக்கள் கவலை!

14536 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் குளம் நேற்று (6) அதிகாலை உடைந்து நீர் முழுவதும் வீன்விரயமாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

இந்த குளம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூபா 1940000 பெறுமதியில் ஆழப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு 2015 ஆம் ஆண்டு ரூபா1898928.57 பெறுமதியில் துருசு பகுதியிலிருந்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு இரண்டு தடவையில் மொத்தமாக ரூபா 3838928.57 பெறுமதியான நிதியில் அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை வேளையில் துருசு பகுதியில் குளம் உடைப்பெடுத்து சுமார் பத்து அடிக்கும்  நீளமான அணைக்கட்டு உடைந்து சென்றுள்ளது குறித்த குளத்தில் இரண்டு தடவை அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் குறித்தபகுதியின் அபிவிருத்தி பனி சரிவர செய்யப்படாது அதிகாரிகளின் தவறாகவே கருதப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்தவர்கள் குறித்த துருசின் கீழ்பகுதியில் பழமையான கொட்டு ஒன்றே காணப்பட்டிருப்பதாகவும் குறித்த பகுதி அபிவிருத்தி பணிக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும் குறித்த இடத்தில் உமை ஏற்ப்பட்டு உடைப்பெடுத்திருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் கடந்த இரண்டு மூன்று வருடமாக  வரட்சி காரணமாகவும் நீர் இல்லாது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த குளத்தில் அண்மைய நாட்களாக நீர் நிறைந்து வருவதை பார்த்து சந்தோசமடைந்தோம்  இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த குளம் உடைப்பெடுத்து குளத்து நீர் வெளியேறியுள்ளது இந்நிலையில் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளனர் இதனை உடனடியாக சீர் செய்யும் சாத்தியக்கூறு காணப்படுகிறது.

.எனவே விரைவாக புனரமைத்தால் இனிவரும் நீரையாவது தேக்கி எமது குளத்தின் கீழுள்ள நூறு ஏக்கர் வரையான வயல் நிலங்களை காப்பாற்ற வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

எது எவ்வாறிருப்பினும் குளத்திற்கு ரூபா 3838928.57 பெறுமதியான நிதி ஒதுக்கீடு செய்தும் இன்று குளம் உடைந்து நீர் இல்லாமல் போய்விட்டது மக்களுக்கு பாதிப்பே இது யாருடைய தவறு

Leave a comment