நீர்மின் உற்பத்தி  40 சதவீதமாக அதிகரிப்பு

Posted by - November 9, 2017

நீர்மின் உற்பத்தி  40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய  நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய தினமும் நாட்டில் பல பாகங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், ஊவா ஆகிய மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் 

கட்சி பிளவு ஏற்பட கருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமையே – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 9, 2017

கருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையினாலேயே  கட்சிப் பிளவுகள் ஏற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு இடையில்  இணக்கப்பாட்டுடன் ஆசன ஒதுக்கங்களை பங்கிட்டு, ஒற்றுமையாக போட்டியிடுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சாட்சி

Posted by - November 9, 2017

இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக, ஐரோப்பிய நாடுகளில் அரசியல் அந்தஸ்த்துக் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் சாட்சி  வழங்கியுள்ளனர். அசோசியேட் ப்ரஸ் அவர்களிடம் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டிருக்கிறது. 30க்கும் அதிகமான மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் அறிக்கைகளும் இதற்காக குறித்த  ஊடக நிறுவனத்தினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் நேர் காணலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  50க்கும் அதிகமான தமிழ் ஆண்கள், இலங்கையில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம், சித்திரவதைகள் உள்ளிட்ட துன்புறுத்தல்களுக்கு  ஆளாகி இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் கப்பல் இலங்கை பிரவேசம்

Posted by - November 9, 2017

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை ஏற்றிய  நெவஸ்கா லேடி என்ற கப்பல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது. சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சியசாலையை குறித்த கப்பல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து எரிபொருளை வெளியேற்றும்  நடவடிக்கைகள் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கும் என்று, கனியவள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி

அரசியல் யாப்பு வழிநடத்தல் அறிக்கை

Posted by - November 9, 2017

அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான வாத விவாதங்கள் எதிர்வரும் தினங்களிலும் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான வாதம் நேற்றைய தினமும் ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, அதிகாரப் பகிர்வு நாட்டுக்கு முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்ஊடாகவே

சைட்டத்தை ரத்துச்செய்ய அரசாங்கம் அவதானம்

Posted by - November 8, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் ரத்துச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அது தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் சிறப்பு அறிவிப்பொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாக அவர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா

எரிபொருள் கப்பல் இலங்கை பிரவேசம்

Posted by - November 8, 2017

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் முத்துராஜவெல எரிபொருள் விநியோக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் என கொழும்பு துறைமுக பொறுப்பாளர்  தெரிவித்தார். அத்துடன், அந்த கப்பல் பெற்றோல் விநியோக பகுதியை வந்தடைவதற்கு முன்னர் அந்த பெற்றோலின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்காக பரிசோதனையாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு

பால் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்- அமெரிக்கா

Posted by - November 8, 2017

இலங்கையில் பாலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தோமஸ் செனன் மேலும் குறிப்பிட்டார். வர்த்தகம், முதலீடு, வெளிநாட்டு உதவிகள் உட்பட சகல தரப்புக்களுடனுமான நேரடி தொடர்புகளை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 8, 2017

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வாழ்வாதார உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச சபைக்குட்பட்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை வழங்கும் நி-கழ்வு இன்று புதன் கிழமை நடைபெற்றுள்ளது. சங்கானை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கியதுடன்