இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சாட்சி

4724 18

இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக, ஐரோப்பிய நாடுகளில் அரசியல் அந்தஸ்த்துக் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் சாட்சி  வழங்கியுள்ளனர்.

அசோசியேட் ப்ரஸ் அவர்களிடம் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டிருக்கிறது.

30க்கும் அதிகமான மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் அறிக்கைகளும் இதற்காக குறித்த  ஊடக நிறுவனத்தினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 20 பேர் நேர் காணலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  50க்கும் அதிகமான தமிழ் ஆண்கள், இலங்கையில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம், சித்திரவதைகள் உள்ளிட்ட துன்புறுத்தல்களுக்கு  ஆளாகி இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

எவ்வாறானினும் இந்த குற்றச்சாட்டை இலங்கையின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

Leave a comment