பால் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்- அமெரிக்கா

4991 24

இலங்கையில் பாலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தோமஸ் செனன் மேலும் குறிப்பிட்டார்.

வர்த்தகம், முதலீடு, வெளிநாட்டு உதவிகள் உட்பட சகல தரப்புக்களுடனுமான நேரடி தொடர்புகளை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment