எரிபொருள் கப்பல் இலங்கை பிரவேசம்

5036 0

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை ஏற்றிய  நெவஸ்கா லேடி என்ற கப்பல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது.

சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சியசாலையை குறித்த கப்பல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து எரிபொருளை வெளியேற்றும்  நடவடிக்கைகள் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கும் என்று, கனியவள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்று பிற்பகலுக்குப் பின்னர் அதில் இருந்து எரிபொருளை நாடெங்கிலும் விநியோகிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்று காலை ஏலவே நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தொகுதி இன்று காலை வேளையில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 24 மணி நேர எரிபொருள் விநியோக திட்டம் ஒன்றை முன்கெடுக்கவிருப்பதாகவும், எரிபொருள் தேவை முழுமைப்படுத்தப்படும் வரையில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment