எரிபொருள் கப்பல் இலங்கை பிரவேசம்

392 0

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த எரிபொருள் முத்துராஜவெல எரிபொருள் விநியோக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் என கொழும்பு துறைமுக பொறுப்பாளர்  தெரிவித்தார்.

அத்துடன், அந்த கப்பல் பெற்றோல் விநியோக பகுதியை வந்தடைவதற்கு முன்னர் அந்த பெற்றோலின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்காக பரிசோதனையாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை பிற்பகல் 2 மணியின் பின்னர் நாடு பூராகவும் பெற்றோலை  விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தள்ளார்.

இதேவேளை, ஆறாவது நாளாகவும் நாட்டின் பல பகுதிகளில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment