நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சத்தியப்பிரமாணம்

Posted by - November 10, 2017

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டது. இந்தநிலையில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் என்பதை மறைப்பார்களாக இருந்தால், அது பொதுமக்களை ஏமாற்றும் செயல். எனவே இந்த விடயத்தில் அவதானம் செலுத்துமாறு சபாநாயகரை, 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு

Posted by - November 10, 2017

அவுஸ்திரேலியா தமது அகதி கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு விதித்தள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற அகதிகள் கடல்கடந்த விசாரணைகள் என்ற கொள்கையின் கீழ், பப்புவா நியுகினிக்கு சொந்தமான தீவுகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள், மூன்றாம் நாடொன்றில் குடியேற்றப்படாலும், அகதி அந்தஸ்த்து வழங்கப்படாமலும் உள்ளனர். அண்மையில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானஸ் தீவின் முகாம்

இந்திய -இலங்கை உறவில் பாதிப்பு இல்லை

Posted by - November 10, 2017

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனா நிறுவகிக்கின்றமையால்,  இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளத. இந்திய கடலோர பாதுகாப்புபடையின் பணிப்பாளர் ரஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உள்ளன. இதனால் சீனா ஹம்பாந்தொட்டை  துறைமுகத்தை பொறுப்பேற்கின்றமை, இந்திய – இலங்கை உறவில் தாக்கம் செலுத்தாது என்று அவர் கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடாளுமன்ற குழு இலங்கை விஜயம்

Posted by - November 10, 2017

பொதுநலவாய நாடாளுமன்ற ஒழுங்கமைப்பின் கனேடிய கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. கனடாவின் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, இலங்கையில் 3 தினங்கள் தங்கி இருந்து சந்திப்புகளை நடத்தவுள்ளது. கனடாவின் உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்தள்ளது. இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர, வர்த்தக, சமுக தொடர்புகள் தொடர்பில் இந்த குழு கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பண்டக வரி குறைப்பு

Posted by - November 10, 2017

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விசேட வர்த்தக பண்டக வரி குறைக்கப்பட்டதன் மூலம் உள்ளுர் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து, அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விசேட வர்த்தக பண்டக வரிகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார். உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுக்கான வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டன. அதன்படி,

புதிய அரசியல் அமைப்பில்  சகல கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் – மெதடிஸ்த தேவாலயம்

Posted by - November 9, 2017

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் சகல கட்சிகளும்  ஒன்றிணைந்து  செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை மெதடிஸ்த தேவாலயம் கோரியுள்ளது. இந்த அரசியலமைப்பை தடுத்து  நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அப்பால் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டும் என்று தேவாலயம் கேட்டுள்ளது. மெதடிஸ்த தேவாலய தலைவர் வணக்கத்துக்குரிய தந்தை ஆசிரி பெரேரா இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்தமையானது அரசியல் அமைப்பை உருவாக்குதன் நோக்கத்திலேயாகும். அத்துடன் அடுத்து

எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்

Posted by - November 9, 2017

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான நெவஸ்கா லேடி கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட  எரிபொருளை, நாடு முழுவதும் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனிய வள களஞ்சியசாலை நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர், சஞ்சீவ விஜேரத்ன இதனைத் தெரிவித்தார். 700  மெற்றிக் தொன் எரிபொருள் கொள்ளளவுடன் முத்துராஜவெல மிதவையிலிருந்து  எரிபொருளை பாய்ச்சும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக,

யாழ். மேல் நீதிமன்றில்  மனு  தாக்கல்

Posted by - November 9, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில்  1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த பன்னிரெண்டு மனுக்களில் ஒன்பது பேரது மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில், அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்ந்த ஏனைய மூன்று மனுக்களும் எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

புதுக்குடியிருப்பு கேப்பாபுலவு வீதியில் விபத்து,பலர் காயம்

Posted by - November 9, 2017

புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் 10ஆம் வட்டாரப்பகுதியில் விபத்து ஒன்று இன்று(9) காலை இடம்பெற்றது . ஆடை தொழில்சாலைக்கு பெண்களை ஏற்றிசென்ற பேரூந்து எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு விலத்தி வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று காலை புதுக்குடியிருப்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு விலத்தி வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம்

சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரிப்பு

Posted by - November 9, 2017

சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுற்றுலா தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பிரதேசத்துக்குள் வருவதில் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுற்றுலா பயணிகள் மற்றும் வழிக்காட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீகிரிய புதிய நகர், பொது வாகன தரிப்பிடம் மற்றும் சீகிரிய மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாது விடத்து சுற்றுலா தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்படும்