ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு

4793 0

அவுஸ்திரேலியா தமது அகதி கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு விதித்தள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற அகதிகள் கடல்கடந்த விசாரணைகள் என்ற கொள்கையின் கீழ், பப்புவா நியுகினிக்கு சொந்தமான தீவுகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள், மூன்றாம் நாடொன்றில் குடியேற்றப்படாலும், அகதி அந்தஸ்த்து வழங்கப்படாமலும் உள்ளனர்.

அண்மையில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானஸ் தீவின் முகாம் மூடப்பட்டதை அடுத்து பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கையானது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.

இந்தநிலையில் இந்த விடயம் குறித்து ஆராய்ந்த 18 பேர் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது கொள்கையை ஒரு வருடத்துக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைய அவுஸ்திரேலிய தமது அகதிக் கொள்கையையும், குடிவரவுக் கொள்கையையும் மாற்ற வேண்டும்.

அத்துடன் அகதிகளை நிராகரிக்கின்ற தன்மை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று அந்த குழு அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment