காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பன்னிரெண்டு மனுக்களில் ஒன்பது பேரது மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில், அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர்ந்த ஏனைய மூன்று மனுக்களும் எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

