ஜின்பிங்குடன் சேர்ந்து உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண டிரம்ப் உறுதி!

Posted by - November 10, 2017

அமெரிக்கா, சீனா இடையே ரூ.16¼ லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜின்பிங்குடன் சேர்ந்து உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும்

Posted by - November 10, 2017

இலங்கையின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவுக்கு தென்மேற்கு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு கிழக்கில் நிலவும் இடியுடன் கூடிய மழை காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக

வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை: போப் ஆண்டவர் அதிரடி

Posted by - November 10, 2017

இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த தாயின் சடலத்துடன் இரண்டு நாட்களாக தனிமையில் இருந்த குழந்தை

Posted by - November 10, 2017

22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, மாதம்பாகம, இடம்தொட்ட பிரதேசத்தில் வசிக்கும் விமுசிகா தில்கானி என்ற ஒன்றரை வயது குழந்தையுடைய இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் மீன்பிடி தொழிலில் ஈடுபடக்கூடியவர் என்பதுடன், கடந்த நவம்பர் மாதம் 01ம் திகதி அவர் மீன்பிடி நடவடிக்கைக்காக காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மின்பிடிக்காக சென்றுள்ளார். கணவர் வீட்டில் இல்லாத

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - November 10, 2017

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தாய்லாந்து தூதுவர் சூலாமணி சாட்சுவான் தெரிவித்துள்ளார். இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அவர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

பண்டாரவளையில் “போரா 12″ உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

Posted by - November 10, 2017

பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியில் நேற்று அதிகாலை பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பொலிஸார் அனுமதிப் பத்திரமற்ற ‘போரா 12’ ரக உள்நாட்டு துப்பாக்கியொன்றினை மீட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிட்ட போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த 03 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் விசாரணை: மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்ய குழு

Posted by - November 10, 2017

ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் உயர்மட்ட டாக்டர்கள் குழுவை விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடு குறித்து கவலையில்லை – இந்தியா

Posted by - November 10, 2017

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங், இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டிருப்பது இந்தியாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாம் சிறிலங்காவுடன், புரிந்துணர்வு உடன்பாடு செய்திருக்கிறோம். சீனாவின் தலையீடுகளால் எமது உறவுகளில்

நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைப்பதா?: சீமான் கண்டனம்

Posted by - November 10, 2017

ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.