வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா?

Posted by - November 10, 2017

வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல விடயங்களையும் பட்டியலிட்டார்.

பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணை!

Posted by - November 10, 2017

பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி!

Posted by - November 10, 2017

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டிகள் 2017 – சுவிஸ்

Posted by - November 10, 2017

பேச்சுப்போட்டிகள் 2017 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை! 18.11.2017 சனி காலை 10:00 மணி முதல்… வலய மட்டத்தில் சூரிச் , பேர்ண், லவுசான், லூட்சேர்ன் மாநிலங்களில்… நாடு தழுவிய ரீதியில்.. 19.11.2017 ஞாயிறு காலை 10:00 மணி முதல்.. சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் நடாத்தப்படும் போட்டிகளில் எம்மவர்களின் திறமைகளை மென்மேலும் ஊக்குவிக்க அனைத்துத் தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு:

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்தும் – ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன்

Posted by - November 10, 2017

இலங்கை இராணுவத்துக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்தும் என ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

புகையிரதத்தில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தடை

Posted by - November 10, 2017

புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் இடமளிக்கப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்எம். அபேயவிக்கிரம இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மற்றும் இடையூறுகள் தொடர்பில் பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புகையிரத சேவை பொதுமக்களின் போக்குவரத்து சேவை வசதிக்காகவே நடத்தப்படுகின்றது . எனவே பயணிகளுக்கு இவ்வாறான சிரமங்களை எதிர்நோக்க இடமளிக்க முடியாது. அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்த

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்ரிப்பு

Posted by - November 10, 2017

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில் அனுஷ்ரிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சி.துரைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது  தீபத்தை ஏற்றி அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். வடக்குமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தமிழரசுக்கட்சி சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் க.அருந்தவபாலன்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

Posted by - November 10, 2017

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் சுகாதார அமைச்சர் ஞா குணசீலன் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்  மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் ஜெனோபர் மாவட்ட அரசாங்க

19 இலங்கையர் இந்தோனேசியாவில் தடுத்துவைப்பு

Posted by - November 10, 2017

இலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக அந்த நாட்டின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளாக சென்ற அவர்கள், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக கடந்த மூன்று தினங்களாக வீடுகளில் தங்கியிருந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் இந்தோனேசிய வீசா விதிகளை மீறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகளுக்காக குறித்த 19 இலங்கையர்களினதும் கடவுச்சீட்டுக்கள் இந்தோனேசிய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.