19 இலங்கையர் இந்தோனேசியாவில் தடுத்துவைப்பு

431 0
இலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக அந்த நாட்டின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளாக சென்ற அவர்கள், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக கடந்த மூன்று தினங்களாக வீடுகளில் தங்கியிருந்துள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் இந்தோனேசிய வீசா விதிகளை மீறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளுக்காக குறித்த 19 இலங்கையர்களினதும் கடவுச்சீட்டுக்கள் இந்தோனேசிய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment