மாரவில – கடுனேரிய கடற்பகுதியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - December 26, 2017

மாரவில – கடுனேரிய கடற்பகுதியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் மாரவில – கடுனேரி பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 47 வயதான இருவரே பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, வெலிகந்தை – அசேலபுரம் பகுதி ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெல்லவாய – ஆனாபல்லம் பகுதியைச் சேர்ந்த

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையில் கிடைத்த வருமதிகள்

Posted by - December 26, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பாடுகளை பணிகளை சீன வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைத்த வருவமதிகள் தொடர்பாக மத்திய வங்கி தகவல் வௌியிட்டுள்ளது. 

அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கை​யே தேயிலைக்கான ரஸ்யாவின் தடை நீக்கப்பட்டது!

Posted by - December 26, 2017

ரஸ்யாவின் தேயிலை ஏற்றுமதி தடைக்கு அரசாங்கம் விரைந்து எடுத்த நடவடிக்கைக்கு எங்களுடைய பெருந்தோட்ட மக்கள் சார்பாக நன்றிகளை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

அபராதத் தொகை வருமானம் 2 பில்லியன்

Posted by - December 26, 2017

போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறிய வாகன சாரதிகள் மூலம் கடந்த பத்து மாதத்தில் 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

Posted by - December 26, 2017

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர், உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது என கூறினார். வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும்,

வெனிசுலா நாட்டு தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுத்த கனடா: நீடிக்கும் மோதல்

Posted by - December 26, 2017

கனடா மற்றும் பிரேசில் தூதர்களை நாட்டை விட்டு வெனிசுலா வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு தூதரக அதிகாரிகளை மொத்தமாக கனடா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.

ரஷ்யா: மெட்ரொ ரெயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து – 4 பேர் பலி

Posted by - December 26, 2017

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்கப்பாதைக்குள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குண்டு மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்: ஆய்வில் புதிய தகவல்

Posted by - December 26, 2017

மனதில் மிக அதிகமான பொறுமை குடிகொண்டிருக்கும் குண்டு மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது

Posted by - December 26, 2017

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டலை கட்ட தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து திட்டமிட்டுள்ளது.

கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ அங்குதான் இருப்பேன்: அமைச்சர் பாஸ்கரன்

Posted by - December 26, 2017

அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு கட்டுப்படுவேன். கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ, அங்குதான் இருப்பேன் என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.