மாரவில – கடுனேரிய கடற்பகுதியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் மாரவில – கடுனேரி பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 47 வயதான இருவரே பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வெலிகந்தை – அசேலபுரம் பகுதி ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெல்லவாய – ஆனாபல்லம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

