அபராதத் தொகை வருமானம் 2 பில்லியன்

344 0

போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறிய வாகன சாரதிகள் மூலம் கடந்த பத்து மாதத்தில் 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் தவறிழைக்கும் இடத்தில் செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை மூலம் 1.3 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சட்டம், ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 560 மில்லியன் ரூபாவினை நீதிமன்ற அபராதத் தொகை மூலமும், 90 மில்லியன் ரூபாவினை வாகன விபத்துக்கள் தொடர்பில் அதுக்கு பொறுப்பானவர்களிடம் அறவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும், செய்வதற்கும், ஏனைய போக்குவரத்து சட்டதிட்டம் தொடர்பான குற்றங்களை இழைப்பவர்களையும் கைதுசெய்வதற்காக இந்த புத்தாண்டு காலத்தில் விசேட வேலைத்திட்டங்கள் அமுலபடுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment