மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில் புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை இதன் காரணத்தினால் நாவற்குழிப் பகுதியில் உள்ள

