வரவு, செலவுத் திட்ட ஆலோசனைகளின்படி தொலைபேசி கோபுரங்களுக்காக அறவிடப்படும் வரி அதிகரிக்கப்பட்டதால் கைத்தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி கோபுரங்களுக்காக மாதாந்தம் இரண்டு லட்ச ரூபா வீதம் அறவிடுவதற்கு முன் வைக்கப்பட்ட ஆலோசனைகளின்படி சம்பந்தப்பட்ட கைத்தொலைபேசி நிறுவனங்கள் இந்த வரியை பாவனையாளர்கள் மீதே சுமத்தும் எனவும் , இதனால் கைத்தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும் எனவும் தெரியவருகின்றது.
கைத்தொலைபேசி நிறுவனங்கள் நாடு முழுவதும் 11922 தொலைபேசி கோபுரங்களை நிர்மாணித்துள்ளன. இதன்படி இக் கோபுரங்களுக்காக மாதாந்தம் 223கோடியே 84 இலட்சம் ரூபாவைச் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே தொலைபேசி நிறுவனங்கள் இத்தொகையை கைத்தொலைபேசி பாவனையாளர்களிடமிருந்தே அறிவிடுமென்பதால் கைத்தொலைபேசி கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

