மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்த யானைக் கூட்டம்!

417 0

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி மக்கள் வாழ்விடப்  பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த யானைக் கூட்டம் அப் பகுதி மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்தமைநினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது.

நெடுங்கேணியின் ஓடைவெளிக் கிராமத்தின்  மக்கள் வாழ்விடப்பகுதிக்குள் அதிகாலையில் புகுந்த யாணைகள் மக்களின் வாழ்வாதாரத் தொழிலான பப்பாசிச் செய்கையினை அழித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 360ற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

3 விவசாயிகளிற்கு சொந்தமான நிலப்பில் இருந்த பெருந்தொகைப் பப்பாசி மரங்களில் இருந்தே இவ்வாறு அடியோடு சாய்க்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த விவசாயிகளிற்கு  சுமார் 4 லட்சம் ருபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிராமசேவகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேநேரம் மழைகாலம் என்பதனால் நெடுங்கேணியை அண்டிய பகெதிக்குள் தினமும் இரவுவேளைகளில் ஊடுருவும் யாணைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றபோதும் எவரும் கண்டுகொள்ளாதமையினால் விவசாயிகள் லட்சக்கணக்கில் நட்டம் அடைவதாக குறித்த பாதிப்பினை எதிர்கொண்ட விவசாயி தெரிவித்தார்.

Leave a comment