இனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ்
தமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக இருந்தது. இது ஒன்றும் அரசாங்க ரகசியமில்லை. கல்வியறிவால் உயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீதான சிங்களரின் காழ்ப்புணர்ச்சிக்கு இதுதான் அடிப்படை. குறைந்துகொண்டே போகிற ஓர் இனத்தில் பிறந்த நமக்கு மற்றவரின் அறிவுக்கூர்மை குறித்தெல்லாம் சந்தேகப்படுவதற்கான தகுதி அறவே இல்லை. தமிழர்களையும் சிங்களரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை விட சிங்களத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தான் முக்கியம் என்று படுகிறது

