பாணதுறை பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து

317 0

1800741198fireபாணதுறை – உயன்வத்தை பகுதி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாணதுறை பொலிஸார் மற்றும் களுத்துறை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை தொழிற்சாலையின் ஒருபகுதி தீயினால் சேதமடைந்துள்ளது. மேலும் தீப் பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.