மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் நினைவு தினம்

299 0

மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் இன்று தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணனின் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்விற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிருத்தி அமைச்சர்¸ பழனி திகாம்பரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் உட்பட மலையக மக்கள் முன்னனியின் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டார்கள்¸.

நிகழ்வில் அமரர் பெ. சந்திரசேகரனின் படத்திற்கு மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணன் மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து அதிதிகள் விளக்கு ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் உரைகளை ஆற்றி அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர்.பெ.சந்திரசேகரனுக்கு தலவாக்கலையில் உருவ சிலை அமைக்கப்படும். இதற்காக அமரரின் குடும்பத்தாரருடனும், கட்சி முக்கியஸ்தர்களிடமும் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்படும் செயலுக்கு தான் ஆதரவு தருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7 ஆவது சிரார்த்த தினம், இன்று (01) காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனது அரசியலின் பிரவேச பாசறை மலையக மக்கள் முன்னணியாகும். மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்த நான் மாகாண சபையில் வெற்றியீட்டியதன் பின் ஆசீர்வாதம் பெற சென்ற போது என்னை ஆசீர்வதித்த அமரர்.சந்திரசேகரனிடம் அடுத்த முறை நாம் இருவரும் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவோம் என தெரிவித்தேன்.

இதன்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கட்சியிலிருந்து விலகும் நிலை உருவாகியது.

ஆனால் இன்று அவர் கண்ட தனி வீட்டு கனவை நனவாக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளதை எண்ணி பெருமைப்படுகின்றேன் என தெரிவித்தார். இன்று நான் ஒரு அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் இருப்பதற்கு காரணம் இவரின் ஆசீர்வாதம் தான் நான் அங்கம் வகித்த கட்சிக்கு ஒரு காலமும் துரோகம் செய்ய மாட்டேன்.

நான் உண்மையை பேசி வேகமாக சேவையை செய்யும் ஒரு நபர். கெட்டவை நடந்தால் சகித்து கொண்டு செல்லவும் மாட்டேன். மலையக மக்கள் முன்னணியின் ஒற்றுமையின் காரணமாகவே 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை சமமாக பிரித்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செயல்பட உள்ளேன்.

இதேவேளை, குருவிகளுக்கு கூட தனி கூடுகள் இருக்கின்றது. ஆனால் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் இல்லையே என ஆதங்கம் கொண்டவர் அமரர்.பெ.சந்திரசேகரன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க பாடுபட்டவரை இழந்தமை ஒரு ஏமாற்றம் என அவர் குறிப்பிட்டார்.வடக்கு, கிழக்கில் யுத்த காலப்பகுதியில் யுத்தத்திற்கு முடிவு கட்டும் முகமாகவும், சரியான தீர்வை எட்டிக்கொடுக்கும் வகையிலும் அரச பிரதிநிதியாக அன்று அமைச்சராக இருந்த சந்திரசேகரன் பல பேச்சுவார்த்தைகளையும் வெளிநாடுகளுக்கு சென்று செயல்பட்டார்.

அன்று அவருடைய சிந்தனை மதிக்கப்படாது. அரசாங்க தரப்பில் சிலர் ஒதுக்கினர். இவரின் அறிவுரையை கேட்டிறிந்தால் நாடு சீரும் சிறப்பாகவும் இருந்தருக்கும். என தெரிவித்த அமைச்சர் 2004ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் அரசு உருவாகிய பொழுது அதற்கு ஆதரவு அளித்த அமரர்.சந்திரசேகரன் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொள்ள 7 பேர்ச் காணியும் தனி வீடும் வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தார்.