வறுமை ஒழிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபா நிதி உதவி

Posted by - November 14, 2017

இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தேவையான உணவை பெற்று கொள்வதற்கான திட்டத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது. இந்த திட்டத்திற்காக ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபாவை வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழங்கவுள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுனர்கள் ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதரக குழுவினர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய துதுக்குழுவின் தலைவர் ரங் லாய்

பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்குண்டு பெண் பலி

Posted by - November 14, 2017

அம்பாறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுக்கு விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு மைதானத்துக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸில் வந்த இந்த பெண் இறங்கி செல்லும் போது பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை ஐ.தே.கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம்

Posted by - November 14, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி

Posted by - November 14, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 264 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017

வடக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் சாளுவன் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களுக்கு வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த 10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று சுழிபுரம் சாளுவன் பகுதியில் நடைபெற்றுள்ளது. மீன்பிடி வலைகளை வழங்கிய அமைச்சர் தொடர்ந்து அங்கு பேசுகையில்.. நாம் செய்யும் இந்த உதவியானது உங்கள் வாழ்க்கையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற

இன்று யாழில் பல்கலை மாணவர்களின் மாபெரும் பேரணி!

Posted by - November 14, 2017

பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

இலங்கை விடயங்கள் குறித்து ஜெனிவாவில் விமர்சனம்

Posted by - November 14, 2017

இலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை நாளை ஐக்கிய நாடுகள் சபையில் விமர்சிக்கப்படவுள்ளது. ஜெனிவா நகரில் இது நடைபெறவுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நஸ்ட ஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடவடிக்கைகள் போன்ற இலங்கை குறித்த பல விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவனின் உடல் மூன்று நாட்களின் பின் கரையொதுங்கியது

Posted by - November 14, 2017

கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் இன்று திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயில்கின்ற சாய்ந்தமருதை சேர்ந்த ஆறு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் சாய்ந்தமருது

வவுனியாவில் இந்தியப் பிரஜை கைது

Posted by - November 14, 2017

குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர், வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து பொலிஸார் இவரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - November 14, 2017

ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு பதுளை மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்து செய்யும் வரை தாம் பணி பகிஸ்கரிப்பினை தொடரவுள்ளதாகவும் பிரதேச செயலக அரச