வறுமை ஒழிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபா நிதி உதவி

220 0

இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தேவையான உணவை பெற்று கொள்வதற்கான திட்டத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.

இந்த திட்டத்திற்காக ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபாவை வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழங்கவுள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுனர்கள் ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதரக குழுவினர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய துதுக்குழுவின் தலைவர் ரங் லாய் மார்கூ கருத்து தெரிவிக்கையில், இதற்கான திட்டம் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களை கவனத்தில் கொண்டு வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a comment