நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

Posted by - January 4, 2017

நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை, முச்சக்கரவண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மூன்று சந்தேகநபர்களையும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்தனர். குருநாகல் பிரதேசத்திலிருந்து கண்டி பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்வதற்காக இவை எடுத்துவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மஹய்யாவ, தென்னேகும்புர மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச்

நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது- ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017

நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவையை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப் போவதில்லை எனவும்; இலவச சுகாதார சேவையை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வழங்குவோம் எனவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார். சீனாவின் உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

Posted by - January 4, 2017

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண மாட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நாட்டை விற்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி கட்சியினரால் இன்று யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டின் வளங்கள் வெளிநாட்டிற்கு விற்கப்பட இருப்பதாகவும் மக்களுடைய சொத்துக்கள் மற்றும் உடமைகள்

மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்

Posted by - January 4, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவிருந்த பாதுகாப்பு தலைமை அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கொழும்பில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

Posted by - January 4, 2017

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த போராளிகளின் விபரங்கள் தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக முன்னர் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்- நல்லிணக்கத்திற்கான செயலணி

Posted by - January 4, 2017

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என நல்லிணக்கத்திற்கான செயலணி பரிந்துரை முன்வைத்துள்ளது. நல்லிணக்கத்திற்கான செயலணி தனது பரிந்துரைகளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்றைய தினம் சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, ஸ்தாபிக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டமைப்பின் அனைத்து வழக்கு விசாரணைகளின் போதும், உள்நாட்டு நீதிபதிகளுடன்

ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்- அஜித் பீ பெரேரா

Posted by - January 4, 2017

மாற்று மின்சக்தி பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று முதல் சூரிய சக்தி மின்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்படி, ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது காணப்படுகின்ற மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும் வகையில் மிகவும் இலாபகரமான மாற்று திட்டத்தை நோக்கி செல்வதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே விஜயம் (காணொளி)

Posted by - January 4, 2017

இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டார். இந்திய அரசினால் அமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணத்தில் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படுகின்ற கலாசார மண்டப அமைவிடத்தையும் பார்வையிட்டதாக தெரிவித்தார். அத்துடன் கச்சதீவில் புதிதாக அமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தையும் தனது ஒருநாள் விஜயத்தில் பார்வையிட்டதாக குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் வலுவானது – ரணில்

Posted by - January 4, 2017

நல்லாட்சி அரசாங்கம் வலுவானது எனவும், எந்த அரசியல் குழப்பங்களும் நாட்டில் இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘நிலையான யுகத்திற்கான தேசிய பொருளாதார திட்டம்’ இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் இதனை தெரிவித்தார். ‘வலுவான இலங்கை – திட்டமிட்ட பயணம், எவருக்கும் நன்மை பயக்கும் பொருளாதாரம்’என்ற பெயரிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தொடர்பில் தெளிவூட்டலும் இதன்போது இடம்பெற்றது.

ஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதல் – துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளார்.

Posted by - January 4, 2017

ஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இரவு விடுதி ஒன்றில் புதுவருட கொண்;டாடத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் மேலும் 27 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபர் இனங்காணப்பட்டுள்ளதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் அவரது பெயர் உள்ளிட்ட விடயங்களை வெளியிடவில்லை. இவ்வாறாயினும்