ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்- அஜித் பீ பெரேரா

31 0

download-6மாற்று மின்சக்தி பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று முதல் சூரிய சக்தி மின்கலம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும் வகையில் மிகவும் இலாபகரமான மாற்று திட்டத்தை நோக்கி செல்வதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.