மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளில் பெறுபேறுகளை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்- தர்தலிங்கம் சித்தார்த்தன்(காணொளி)
யாழ்ப்பாணம் நீர்வேலி கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வேலுப்பிள்ளை மண்டப திறப்பு விழாவும், பரிசில் தின நிகழ்வும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தி.இரவீந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளையின் ஞாபகார்த்த மண்டபம் பாராளுமன்ற உறுப்பினர் தர்தலிங்கம் சித்தார்த்தன், பாடசாலையின் அதிபர், கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு, ஆசியுரை இடம்பெற்றது ஆசியுரையினை நீர்வேலி செல்வக்கதிர்காம

