பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு

293 0

14397927_1140674186046105_411356103_nபாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மிகவும் பின்தங்கியுள்ள பாடசாலைகளுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 7911 பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு பகல் உணவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.