பூர்த்தியற்ற தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிறார் டக்ளஸ்

Posted by - January 8, 2017

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் இன்னும் தமது நம்பிக்கையைக் கைவிடவில்லை.

அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது

Posted by - January 8, 2017

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் பதவியேற்பும் ஈழத்தமிழர்களும்- சி.அ.யோதிலிங்கம்

Posted by - January 8, 2017

அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக வாழ்ந்தவரும் கழகத் தொண்டர்களினால் சின்னம்மா என அழைக்கப்படுபவருமான சசிகலா நடராஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்!- கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - January 8, 2017

சிறீலங்காவின் அடுத்த ஆட்சியாளர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு விசேட மன்னிப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பினை சிறப்பிக்கும் முகமாக சிறப்பு  நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர்   பணிப்புரைக்கு அமைவாக சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி  என்.பிரபாகரன் தலைமையில், சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட இரண்டு சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து

 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - January 8, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு சிரமதான பணிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ்.யோகராஜா,

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனியவாழ்வு இல்ல மாணவர்களுக்கு ஓகன் இசைக்கருவி(காணொளி)

Posted by - January 8, 2017

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனியவாழ்வு இல்ல மாணவர்களுக்கு ஓகன் இசைக்கருவி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தால் விழிப்புலன் செவிப்புலனற்ற மாணவர்கள் தங்கி கல்வி கற்கின்ற முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்ல மாணவர்களின் இசைத்திறன் மேம்பாட்டிற்காக ஓகன் இசைக்கருவி அன்பளிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் உறவுகளான நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் ரமேஸ் மற்றும் நோர்வே நாட்டில் வசிக்கும் வானதி ஆகியோரின் நிதியில் இருந்து ஓகன் இசைக்கருவி குறித்த மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி(காணொளி)

Posted by - January 8, 2017

மட்டக்களப்பில், ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தை எ.தேவதாசன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. இந்த விசேட திருப்பலி ஆராதனையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்  மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட மாவட்ட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அரசுக்கு எதிரானவர்களை சிறையில் அடைக்க வேலைத் திட்டம்

Posted by - January 8, 2017

அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் ஆறு பேர் கைது

Posted by - January 8, 2017

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 06 பேர் இன்று (08) இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாண நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.