காசோலையை ஆதரமாக வைத்து வழங்கிய கட்டளை சட்டரீதியற்றது
காசோலைகளை ஆதாரமாகவைத்து பணத்தை மீள வழங்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். “குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் வழக்காளிக்கு வழங்கவேண்டிய 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தும்படி நீதிவான் கட்டளை வழங்கியுள்ளார். அந்தக் கட்டளையானது சட்டரீதியான கட்டளை இல்லை. அந்தக் கட்டளையை இந்த மன்று தள்ளுபடி செய்கிறது. மாறாக எதிரிக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனை நீதிவான்

