வடக்கு தபால் ஊழியர்களுக்கு 583 புதிய சைக்கிள்கள்

322 0
வடக்கு மாகாணத்தில் உள்ள தபால் விநியோக ஊழியர்களுக்கு புதிய சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கென 583 சைக்கிள்களை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு வடக்குக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள்களை தனித்தனியே அனுப்பி வைக்கவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு 269, கிளிநொச்சி 94, வவுனியா 83, மன்னார் 80, முல்லைத்தீவு 57, என ஒதுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 269 சைக்கிள்களும் நேற்று அதிகாலை கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த சைக்கிள்கள் யாழ்.பிரதம தபாலகத்தால் மாவட்டத்தில் உள்ள சகல தபால் விநியோக பணியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய இந்த சைக்கிள்கள் இந்த வருடமே வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தபால் விநியோக பணியாளர்களுக்கும் குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தபால் அமைச்சால் இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்த
க்கது.

Leave a comment