ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் திட்டத்தில் தமிழகம்
மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிகாரிகள் டெல்லி சென்று கையெழுத்திட்டனர். நாடு முழுவதும் உதய் (யுடிஏஒய்) மின்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இந்தியாவில்

