ஜல்லிக்கட்டு நடக்கும் நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

247 0

201701100934099518_pon-radhakrishnan-interview-jallikattu-will-happen-is_secvpfதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

வறட்சியினால் விவசாயிகள் உயிரிழப்பு மிகுந்த மன வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசின் வறட்சி குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்ததும் தமிழகம் கோரியுள்ள நிவாரண தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்கு என ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். அதை செயல்படுத்துவது மாநிலங்களின் கையில் உள்ளது. கர்நாடக அரசு தனது சுயலாபத்திற்காக காவிரி பிரச்சினையை பயன்படுத்துகிறது. இது அங்கு மற்ற கட்சிகளுக்கும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால் மத்திய அரசு நிதானமாக செயல்படுகிறது. தேசிய நதிகளை இணைக்கவும் பிரதமர் மோடி முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

தமிழக விவசாயிகள் நம்பிக்கை இழக்காமல் செயல்படவேண்டும். மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு 2011-ம் ஆண்டு காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தது தான் காரணம். இதை நீக்கி மத்திய அரசு ஆணையிட்டது. அந்த ஆணைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. தடையை நீக்க மீண்டும் மேல் முறையீடு மத்திய அரசு செய்துள்ளது. அதில் தீர்ப்பு சாதகமாக கிடைத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து மத்திய மந்திரி குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க செயலாளர் காவிரிரெங்கநாதன், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுகொண்டார். தொடர்ந்து பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.