ஹம்பாந்தோட்டை நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை!

Posted by - January 10, 2017

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என, தன்னிடம் ஜனாதிபதி கூறினார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா – 2017

Posted by - January 10, 2017

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது. இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை- நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் பல்லினமக்கள் கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் நூர்பேர்க் நகரில் இருந்து விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் இளையோர்களின் செயற்பாட்டைக் கண்டுவியந்து வாழ்த்திச் சென்றனர்.

தேர்தல் தொடர்பில் 23ம் திகதிக்குப் பின்னர் முடிவு

Posted by - January 10, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை ஜனவரி 23ம் திகதிக்கு பின்னர் எடுக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

Posted by - January 10, 2017

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தநிலையில் இன்றையதினம் அவர் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அங்கு சென்ற அவரை கைதுசெய்துள்ளதாக

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு

Posted by - January 10, 2017

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்!

Posted by - January 10, 2017

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது.

நல்லாட்சி அரசின் வேஷம் கலையும்: எதிர்வு கூறும் சிவாஜிலிங்கம்!

Posted by - January 10, 2017

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுதல், அரசியற் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, இராணுவம் குறைப்பு, காணாமற் போனோர் விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னமும் தீர்வு காணப்படாமல் இழுத்தடிப்புத் தொடர்ந்த வண்ணமுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்

Posted by - January 10, 2017

சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் மீண்டும் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்

Posted by - January 10, 2017

சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.