யாழ்.குடாநாடு நீரில் மூழ்கும் அபாயம்
வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாடு நீரில் மூழ்கும் ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து அடை மழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற நேரிடுமென நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நெருக்கடிக்குத்

