உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய சரக்கு கப்பல்

276 0

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

ரெயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளிலும் சீனா முன்னேறி வருகிறது. தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளது.

கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.

அந்த கப்பல் 70.5 மீட்டர் நீளம் கொண்டது. 600 டன் எடை உடையது. அதில் 2 ஆயிரம் டன் சரக்கு ஏற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயக்கப்பட்டது. கப்பலில் பொருத்தப்பட்ட 26 டன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்யப்பட்டது.

மின்சார சரக்கு கப்பல் இயக்கும் நிகழ்ச்சி குயாங்ஷு ஆற்றில் நடந்தது. இக்கப்பல் மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்தது.

இது சீனாவில் குயாங்ஷு ஷிப்யார்டு கம்பெனியால் உருவாக்கப்பட்டது. கப்பல்கள் டீசல் மற்றும் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இது மின்சாரம் மூலம் இயக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

Leave a comment