சிரியாவில் 61 பேர் பலி

209 0

சிரியாவின் அட்டாரெப் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர்.

சிரியா நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள அட்டாரெப் நகரம் மீது நேற்று முன்தினம் போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசின. இதில் 61 பேர் பலியாகினர்.

வெடிகுண்டுகளை வீசியது சிரியா விமானப்படையா அல்லது அவர்களுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய விமானப்படையா என்பது தெரியவில்லை என்று அந்த நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சிரியா உள்நாட்டுப் போர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறியபோது, சிரியாவில் இருந்து அமெரிக்க, ரஷ்ய விமானப் படைகள் வெளியேற வேண்டும் என்றார்.

Leave a comment