இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பதவியேற்பு

231 0

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் (62) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் பென்ஸ் ட்விட்டரில், “ஜஸ்டருக்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளது. இந்த உறவை ஜஸ்டர் மேலும் மேலும் வலுப்படுத்துவார். இதனால் இரு நாடுகளும் பயனடையும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும் முதுநிலை ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் தலைமையிலான குழுவினர், இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளனர். எனவே, ஜஸ்டர் விரைவில் இந்தியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ரிச்சர்டு வர்மா பதவி விலகினார். அதன் பிறகு இந்தப் பதவி காலியாக இருந்து வந்தது.

Leave a comment