ஜிஎஸ்பி10 கிடைக்குமா? இல்லையா?

Posted by - January 15, 2017

இலங்கையி ன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடை நிறுத்தப்பட்டு இருந்த ஜீஎஸ்பி10 வரிசலுகை கிடைக்கின்றது, கிடைத்து விட்டது என்ற கோஷங்கள் இலங்கை அரசியல் பரப்பில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன.

ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே

Posted by - January 15, 2017

ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மதுவிற்பனை தடை நாட்கள் அறிவிப்பு! தமிழர் பண்டிகை நாட்கள் சேர்க்கப்படவில்லை!

Posted by - January 15, 2017

இலங்கையில் மது விற்பனை மற்றும் விநியோகம் என்பன தடைசெய்யப்படும் நாட்களை இலங்கைமதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

கோசோவோவுக்கு ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

Posted by - January 15, 2017

செர்பியா இன மக்கள் வாழும் கொசோவோவின் வடக்கு பகுதிக்கு செர்பிய தேசிய கொடியின் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு ரயிலை பெல்கிரேடில் இருந்து அனுப்பி ரயில் சேவை ஒன்றை செர்பியா தொடங்கியுள்ளது.

தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு – மெர்கல்

Posted by - January 15, 2017

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனிமையாக ஈடுபடுவதைவிட சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே வலிமையானது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி இளைஞர்கள் பேரணி : 500-க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பு

Posted by - January 15, 2017

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது. தற்போது தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய அவனியாபுரம் பகுதியில் கிராம மக்கள் இளைஞர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பேரணி நடத்தி வருகின்றனர். அவனியாபுரத்தில் வாடிவாசல் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேரணி தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நிக்கக் கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முழக்கமிட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுக்க அவனியாபுரத்தில்  ஏராளமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல்

Posted by - January 15, 2017

இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குனர் கவுதமன் போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது: உச்சநீதிமன்ற தடையால் 3வது ஆண்டாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும் என மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் தவறான நம்பிக்கை தந்தன. போட்டி

இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டது!

Posted by - January 15, 2017

தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்!

Posted by - January 15, 2017

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.  உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சிகிச்சை பலனில்லாமல் இன்று காலமானார். அவருக்கு வயது 91  ஆகும். தமிழ்நாட்டில் இரண்டு முறை ஆளுநராக இருந்த பெருமை பர்னாலாவுக்கு உண்டு. 1990 – 91 மற்றும் 2004 – 2011 வரை தமிழகத்தின் ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா இருந்தார். இதேபோல் உத்தரகாண்ட், ஆந்திரா, அந்தமான் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பர்னாலா பணியாற்றியுள்ளார். பர்னாலாவின் வரலாறு: