ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி இளைஞர்கள் பேரணி : 500-க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பு

223 0

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது. தற்போது தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய அவனியாபுரம் பகுதியில் கிராம மக்கள் இளைஞர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பேரணி நடத்தி வருகின்றனர். அவனியாபுரத்தில் வாடிவாசல் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேரணி தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நிக்கக் கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முழக்கமிட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுக்க அவனியாபுரத்தில்  ஏராளமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் மதுரை, பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனிடையே ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மதுரையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரத்தில் கடையடைப்பும் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல், நத்தம், வத்தலகுண்டு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.