இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டது!

352 0

201701150007440807_India-has-lost-an-experienced-administrator-Panneer-selvam_SECVPFதமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்- மந்திரியும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.இதன் காரணமாக சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  காலமானார்.இந்நிலையில், தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சுர்ஜித் சிங் பர்னாலா இறந்த செய்தி கேள்வியுற்றதும் நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். புகழ்பெற்ற மனிதராகவும், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகவும் இருந்தவர்.தன்னுடைய பொதுவாழ்க்கையில் பஞ்சாப் மாநில முதல்வர், மத்திய விவசாயத் துறை மந்திரி மற்றும் சில மாநிலங்களுக்கு ஆளுநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

குறிப்பாக தமிழகத்தில் 1990-91 மற்றும் 2004-11 ஆளுநராக பொறுப்பு வகித்தார். அவரது மறைவால் இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இந்தியா இழந்து விட்டது. தமிழக அரசின் சார்பில் சுர்திங் சிங் பர்னாலாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.