மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

Posted by - January 18, 2017

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் – வடக்கிலும் தெற்கிலும் அச்சம்!

Posted by - January 18, 2017

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது ஒற்றையாட்சி நாடாகுமா என்ற அச்சம் வடக்கிற்கும், சமஷ்டி அரசு உருவாகுமா என்ற அச்சம் தென் பகுதிக்கும் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேர்ர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் இருக்கும் வரை இலங்கை- இந்தியாவிற்கிடையில் முரண்பாடு இருக்காது

Posted by - January 18, 2017

கிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

Posted by - January 18, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 18, 2017

அரச நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.

எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறுவதற்கு 58 நிபந்தனைகளை சிறீலங்காவுக்கு விதிக்கவில்லை!

Posted by - January 18, 2017

சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

Posted by - January 18, 2017

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகள், யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு ஆரம்பித்த குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2016 ஆம் ஆண்டு பயனாளிகளுக்கான திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும்

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா

Posted by - January 18, 2017

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா  புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிகலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம்  நிதி ஒதுக்கீட்டின் மூலம்நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில்அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பட்டிபளை பிரதேச செயலக செயலாளர் திருமதிதினேஷ், உதவித்

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மனத்துங்க

Posted by - January 18, 2017

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக பி.எச் மனத்துங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஸ்ரீ ஹெட்டிகே, அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.