புதிய அரசியலமைப்புச் சட்டம் – வடக்கிலும் தெற்கிலும் அச்சம்!

234 0

piku-4புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது ஒற்றையாட்சி நாடாகுமா என்ற அச்சம் வடக்கிற்கும், சமஷ்டி அரசு உருவாகுமா என்ற அச்சம் தென் பகுதிக்கும் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேர்ர் தெரிவித்துள்ளார்.

இதனால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அது அனைத்து மக்களின் விருப்பம் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.

இவற்றை கவனத்தில் கொள்ளாது தனித்த நிலைப்பாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதில் ஒரு வீதமேனும் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் 30 கால யுத்த்த்தை போன்ற யுத்தத்தையும், 88-89 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சியும் ஏற்படக் கூடும் என்று தம்பர அமில தேரர் எச்சரித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பயப்படுவது யார் என்ற தலைப்பில் கொழும்பு பொது நூலகத்தில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் வேண்டாம் எனவும் திருத்தங்கள் மாத்திரம் போதும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

பிளாஸ்டர்களை ஒட்டுவதன் மூலம் புதிய நாட்டை உருவாக்க முடியாது. இதனால், உறுதியளித்தது போல் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.