ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் மனு
பா.ம.க. இளைஞர் அணித்தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் விரிவாக கூறினார். பின்னர், ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். ஜல்லிக்கட்டு போட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு

