சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

236 0

201701211405317562_More-than-100-al-Qaeda-militants-killed-in-airstrike-on_SECVPFசிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 100 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன.

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபட்டுள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டு வீச்சு தாக்குதலும் நடத்தி வருகிறது.

2013-ம் ஆண்டு முதல் இட்லிப் மாகாணத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அங்கு லிபியாவில் எல்லையில் அல்கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். அங்கு பி.52 ரக குண்டுகளையும், மிகவும் கடை கோடி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளும் வீசப்பட்டன.

அதில் அல்கொய்தா தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன. இத்தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்தார்.

இது அதிபர் ஒபாமா பதவி விலகும் சில மணி நேரத்துக்கு முன்பு நடத்தப்பட்ட மிகப்பெரிய 2-வது தாக்குதலாகும்.