எதியோப்பியாவோடு இராஜதந்திர ரீதியாக கைகோர்க்கும் இலங்கை
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கான இளைஞா் பாராளுமன்றத்தின் முதலாவது அமா்வு இன்று மஹரகம இளைஞா் சேவை மன்றத்தில் உள்ள இளைஞா் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இளைஞா் பாராளுமன்ற அமா்வில் பிரதான உரை நிகழ்த்தி அமா்வினை ஆரம்பித்து வைத்தாா். இதன்போது இளைஞா் சபாநாயகா், பிரதி சபாநாயகா், குழுக்களின் பிரதித் தலைவா் போன்ற பதவிகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்டன. இந் நிகழ்வில் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ஷ, பொருளாதார இளைஞா் இராஜாங்க
அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அதன் விற்பனையும் குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக இலங்கையில் அதிஷ்ட இலாபச் சீட்டுக்களுக்கான விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இதற்கு எதிராக லொத்தர் விற்பனை முகவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து, முன்னைய விலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று, ஜனாதிபதியால் பணிப்புரை வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராகவும்,அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உபதலைவர் பூபாலராஜாவுக்கு எதிராகவும் நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றர். இதன்போது வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பான்ட் வாத்தியக் கருவிகளை பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். குறித்த பாடசாலைகளுக்கு கடந்த ஆண்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட இருந்த குறித்த கட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராததன் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடக்கு மாகானசபை உறுப்பினர் க.சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற
முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, இன்று காவை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும்போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என, இராணுவத்தினர் எச்சரித்திருந்த நிலையிலும், அப்பகுதி மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரவளையிலிருந்து எல்ல நகருக்கு வானொன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்களை பண்டாரவளை பொலிஸ் புலனாய்வுபிரிவினர் நேற்று கைது செய்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே சந்தேக நபர்கள் கது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, பியர்போத்தல்கள் அடங்கிய 21 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வாவியில், மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மீனவர்களால் இன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது. மஞ்சந்தொடுவாய் வாவிக்கரையில் நடமாடிய 10 அடி நீளமான முதலை ஒன்றே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்களால் பிடிக்கப்பட்ட முதலையை, அப்பிரசேத்திலுள்ள மீன்பிடி வாடியில் கட்டி வைத்துள்ளதுடன், இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் மட்டக்களப்பு வாவி பகுதியில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும்
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நாட்டில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், பெண்களின் அங்கத்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், உள்ளுராட்சி, மாகாணசபைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஆதரவுடன் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இக்கையெழுத்துப் போராட்டம், நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது. இதற்கமைய