இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள்சபையின் அடிப்படை அம்சங்களுக்கு இணங்கியதாக இரு நாடுகளுக்கும் இடையில் சம்பிரதாயபூர்வமான நட்பு மற்றும் ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கிலேயே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் எதியோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, குறித்த இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

