மனனை விடுதலை செய்யுங்கள் – அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை

Posted by - January 27, 2017

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்டோரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வத்தை சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்த கோரிக்கையை முதல்வரிடம் அற்புதம்மாள் விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் பலமுறை கோரிக்கை

காலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.

Posted by - January 26, 2017

காலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது. பேருவளை – பரமணியாராம விகாரையின் வருடாந்த பெரஹர உற்வத்தின் காரணமாக குறித்த வீதி மூடப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வாகனங்கள், பேருவளை காவல்துறை நிலையத்துக்கு அருகிலுள்ள வீதி ஊடாக எம்பிலிபிட்டிய, கருணாசேனபுர ஊடாக பிங்ஹேன கந்த விகாரை ஊடாக காலி வீதிக்கு பிரவேசிக்க முடியும். காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், காலி வீதியில், மொரகல –

ஜீ.எஸ்.பி பிளஸால் பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் – மஹிந்த அமரவீர

Posted by - January 26, 2017

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமையினால், பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடற்தொழில் துறை, ஆடைக் கைத்தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபிவிருத்தி ஏற்படும்;. இது இலங்கைக்கு கிடைந்த பாரிதொரு வெற்றியாக தான் கருதுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை பல்கலை மாணவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 26, 2017

பேராதனை பல்கலைகழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கண்டி நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பகிடி வதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ஊடாக எட்டு மாணவர்கள் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்தே, அவர்கள் அனைவரையும் எதிர்வரும்

அரசாங்கத்தினுள் பிளவு – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறுகின்றது

Posted by - January 26, 2017

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினுள் பிரிவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக தெரிய வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நாளை நுகேகொடையில் நடத்தப்படவுள்ள கூட்டம் தொடர்பான ஊடக சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை நுகேகொடையில் நடைப்பெறவுள்ள கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஹூணுபிட்டி தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

Posted by - January 26, 2017

வத்தளை – ஹூணுபிட்டி – ஜயந்தி மஹல் சந்தியில் உள்ள பொலித்தீன் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. தொழிற்சாலை ஊழியர் ஒருவர், தொழிற்சாலையை சுற்றி உள்ள சுழலை சுத்தப்படுத்தி, குப்பைகளுக்கு தீ வைத்த போது தொழிற்சாலைக்கு தீ பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்து, 2 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தினால் அருகில் இருந்த 3 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளரின் விளக்கமறியலுக்கு எதிராக அமைதி போராட்டம்

Posted by - January 26, 2017

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற முன்னிலையில் இந்த போராட்டம் இன்று இடம்பெற்றது. நீதிமன்றத்தின் பிணைக்கான நிபந்தனைகளை மீறியமைக்காக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த அவரை விடுவித்த போது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள தடை

வெட் வரி வீதத்தை குறைக்க முடியும் – நிதியமைச்சர்

Posted by - January 26, 2017

வெட் வரியை நூற்றுக்கு மூன்று வீதம் குறைக்க முடியும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது நாட்டின் மூலதனச் செலவை செய்யக்கூடிய அளவுக்கு வருமானம் இருக்கவில்லை. ஆனால், நாட்டின் மூலதனச் செலவை செலுத்தக்கூடிய வகையில் வருமானம் உள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

கடற்படை அதிகாரிகள் இருவர் விரைவில் கைது

Posted by - January 26, 2017

கடற்படை அதிகாரிகள் இருவரை எதிர்காலத்தில் கைதுசெய்யவுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் காணாமல்போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்படை அதிகாரியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரை, கடந்த 2009ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல்போகச் செய்ததாக கடற்படை

மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - January 26, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் இன்று கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பெண் பல்வேறு மோசகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.