ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராக இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் மரணம்

Posted by - January 31, 2017

சர்வாதிகாரி ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின் 106 வயது உதவியாளரான பர்ன்ஹில்ட் போம்செல் என்ற பெண்மனி மரணமடைந்தார்.

ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

Posted by - January 31, 2017

அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.

தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு – இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 31, 2017

யாழ். சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 1997ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி பொலிஸாரால்

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் – வைகோ

Posted by - January 31, 2017

இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், மனித உரிமைகள் ஆணையருக்கும் வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் தமிழர் படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியிருப்புகள், இராணுவ கட்டுமானங்கள் அகற்றப்படவேண்டும். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்தக்

இலங்கையர்களின் ஊடுருவலை தடுக்க இந்தியா நடவடிக்கை

Posted by - January 31, 2017

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில், ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன. இவற்றில் ஐந்து மணல் திட்டுகள், இந்திய கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. ஏனையவை, இலங்கை கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகப் படகுகளில் செல்பவர்கள், இந்திய எல்லைக்குள் உள்ள மணல் திட்டுகளில் இறக்கி விடப்படுகின்றனர். இவர்களை, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில மீனவர்கள்,

இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

Posted by - January 31, 2017

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா பிஸ்வால், விலக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் அறிவுறுத்தலுக்க அமைய இவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு ஜனவரி

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்ப்பு இன்று

Posted by - January 31, 2017

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்விபயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பில் குறித்த மாணவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மாலபே

தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு

Posted by - January 31, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் ஈழத்தமிழர் அமைப்புகளால் இவ் விடையத்தை யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 27 .01 .2017 அன்று பேர்லின் நகரத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இச் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சில் சிறிலங்கா நாட்டுக்கு பொறுப்பான உயரதிகாரி திரு அல்மெர் அவர்களுடன் , யேர்மன்

இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்

Posted by - January 30, 2017

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் திரு குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி, தமிழ்த் தேச விடுதலை இயக்கத் தலைவர் திரு. தியாகு, தமிழர் தேசிய முன்னணியின் திரு. அய்யநாதன், எஸ். டி. பி. அய்., கட்சியின் திரு. கரீம், பேராசிரியர் இராமு. மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, இயக்குநர் புகழேந்தி, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தந்தை பெரியார்