இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

253 0

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா பிஸ்வால், விலக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் அறிவுறுத்தலுக்க அமைய இவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக நிஷா பிஸ்வால், பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக, நிஷாவின் இடத்துக்கு வில்லியம் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளின் தூதுவர் சமந்தா பவரும் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளின்  28ஆவது தூதுவரான 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியிலிருந்து கடமையாற்றி வருகின்றார்.

அவரது இடத்துக்கு நிக்கி ஹெலிய் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.