காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் ஈழத்தமிழர் அமைப்புகளால் இவ் விடையத்தை யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை 27 .01 .2017 அன்று பேர்லின் நகரத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இச் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சில் சிறிலங்கா நாட்டுக்கு பொறுப்பான உயரதிகாரி திரு அல்மெர் அவர்களுடன் , யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு , தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவை என தமிழ் அமைப்புகள் சார்ந்த பிரதிநிதிகள் சந்திப்பை மேற்கொண்டனர்.குறிகிய நேரத்தில்
நடைபெற்ற இச் சந்திப்பில் பிரதான விடயமாக தாயகத்தில் நடைபெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தை பற்றியும் , அத்தோடு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் வரிச்சலுகை தொடர்பாகவும் பேசப்பட்டது.” நல்லாட்சி” என கூறப்படும் இன்றைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் தொடரும் ஈழத்தமிழர் மீதான கடடமைப்புசார் இனவழிப்பு தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதோடு அது தொடர்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஆவணமும் கையளிக்கப்பட்டது .


